பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா!

3 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்கள்

வல்லம், ஜூன் 20- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா 17.06.2026 காலை 10.00 மணியளவில் இக் கல்லூரியின் விழா அரங்கத்தில் நடைபெற்றது. 2026-2027ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் டிப்ளமோ முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவிகளும் அவர் தம் பெற்றோர்களும் அரங்கத்தில் குழுமியிருக்க விழா துவங்கியது. விழாவை கணினியியல்  மூன்றாமாண்டு மாணவி பஸ்ரினா ஹாக்ரின் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக் கல்லூ ரியின் ஆற்றல்மிகு தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.

பாலிடெக்னிக்  டிப்ளமோ படிப்பிற்கு இக்கல்லூரியை தேர்ந்தெடுத்த பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்துகளை யும் தெரிவித்துக் கொண்ட தாளாளர் அவர்கள் பொறியி யல் பட்டதாரிகளை விட பாலி டெக்னிக்  டிப்ளமோ பயின்ற மாணவர்கள் செய்முறை வேலைகளில் (Practical Works) சிறந்து விளங்குவார்கள் என்று கூறினார்.

மேலும் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல், லட்சியத்துடன் படித்தால் உங்களின் எதிர் காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று கூறிய அவர் மாணவச் செல்வங்கள் எந்தவொரு காரியத்தில் இறங்கும் போதும் ஏன், எதற்கு என்ற கேள்வியை கேட்டு விடை தெரிந்து செயல்பாடுகளில் இறங்கும் போது உங்களின் எதிர்காலம் சிறக்கும் என்று குறிப்பிட்டார்.

மாணவர்களின் பெற்றோர் களிடத்தில் உற்சாகத்துடன் உரையாற்றிய இக் கல்லூரியின் தாளாளர் அவர்கள் விழா முடியும் வரையில் அவ்வப்போது பெற்றோர்களிடமும் மாணவர் களிடமும் உரையாடி மகிழ்ந்தார்.

சிறப்புரை வழங்கிய இக் கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி பாலிடெக்னிக் கில் செயல்படும் பல்வேறு பணி களையும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை விதிகளையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

வாழ்த்துரை வழங்கிய பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா இப்பாலிடெக்னிக் கல்லூரி உருவான வரலாறு, Outcome Based Education என்னும் Students Centric Learning மற்றும் மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை வழிப்படுத்தும் Periyar Foundation for Pre-incubation பற்றியும் மாணவ, மாணவிகளின் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்விக்கு கல்லூரி எடுக்கும் முன்னெடுப்புகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இக்கல்லூரியின் முதன்மை யர் ஜி.இராஜாராமன் இப்பாலி டெக்னிக் கல்லூரியில் உள்ள கல்விசார் பணிகள் பற்றியும்  Curricular, Co-curricular and Extra Curricular Activities பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கல்லூரியின் மாணவ ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் மாணவர்கள் படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய  நெறிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

கட்டட எழிற்கலை துறைத் தலைவர் டி.திரிபுரசுந்தரி, கணினி யியல் துறை பேராசிரியை எக்ஸ்.கிறிஸ்டி மரியா வினோலா, அமைப்பியல் துறை பேராசிரியர் ஆர்.நடராஜன், செயற்கை நுண்ண றிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை தலைவர் எம்.சண்முகப்பிரியா ஆகியோர் அவரவர் துறைகள் பற்றி உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முதலாமாண்டு துறைத்தலைவர் கே.நீலாவதி மாணவர்களுக்கு முதலாமாண்டு பாடத் திட்டத்தினை விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச் சியின் முன்னதாக மூன்றாமாண்டு கணினியியல் துறை மாணவி எல்.பிரியங்காசிறீ வரவேற்புரை ஆற்றினார். பல்வேறு கல்வி உதவித் தொகைகள் பற்றி மூன்றாண்டு இயந்திரவியல் மாணவர் கே.அபிமன்யூ, மூன்றாமாண்டு மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவி கே.மவுனிகா, இரண்டாமாண்டு கட்டட எழிற்கலை மாணவி ஆர்.பிரவீனா மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை எஸ்.பிராங்க்ளீன் சீஸர் ஆகியோர் விளக்கமாக உரையாற்றினார்கள்,

மேலும் மூன்றாமாண்டு கணினியியல் துறை மாணவி எஸ்.ஹரிஷ்மா, மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவர் எ.கின்ஸ்ளின் ராஜ் மற்றும்  மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் பி.காமேஷ் ஆகியோர் தமது துறை செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

அடுத்து விழிகாட்டுதல் பற்றி மூன்றாமாண்டு கணினியியல் துறை மாணவி ஜி.ரேணுகாதேவி, நாட்டு நலப்பணித் திட்டம் பற்றி அமைப்பியல் துறை மாணவர் டி.அன்புசெல்வன் மற்றும் தேசிய மாணவர் படையின் செயல்பாடுகள் பற்றி மூன்றா மாண்டு கணினியியல் துறை மாணவர் பி.பரணி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இவ்விழாவில் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணு வியல் துறை மாணவர் டி.தயாநிதி நன்றியுரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாண வர்களும் பெற்றோர்களும் கல்லூரி வளாகத்திலுள்ள அனைத்து துறைச் சார்ந்த ஆய்வ கங்கள், நூலகம், விடுதி மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தங்களது  மேலான கருத்துகளை மிகவும் உற்சாகத்துடன் தெரிவிக்க விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *