முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் அதிகாரிகள் மாநாடு! சென்னையில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது

1 Min Read

சென்னை, ஜூன் 20– தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் தலைமையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்எப்எஸ் அதிகாரிகளின் மாநாடு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக் கான மாநாடு வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள்: மாநாட்டில் தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவை மக்களைச் சென்றடைவதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

சட்டம்-ஒழுங்கு நிலவரம்: மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம், குற்றச்சாட்டுகளைக் கட்டுப் படுத்துவது மற்றும் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படவுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்க ளாக சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சட்டம்-ஒழுங்கை சீரமைக்க உடனடியாக அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தத் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்தே, தற்போது முதலமைச் சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இந்த இரண்டு நாள் அதிகாரிகள் மாநாடு கூட்டப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால், சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *