
வேலூர், ஜூன் 19- தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டலின்படி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சத்து வாச்சாரியில் 09.06.2026 அன்று மாலை 5.30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வேலூர் மாநகரத் தலைவர் ந.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வேலூர் மாநகரச் செயலாளர் அ.மொ.வீரமணி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் காப்பாளர்
வி.சடகோபன் தொடக்க உரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகம் மாநில அமைப் பாளர் இர.அன்பரசன் நோக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.இ. சிவகுமார், மாவட்ட செயலாளர் இ.தமிழ் தரணி, மேனாள் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், பொதுக் குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, பெரியார் பெருந்தொண்டர் இரா. கணேசன், உ.விஸ்வ நாதன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர் தா.நாகம்மாள், மாநகர மகளிர் அணி வீ.பொன் மொழி, தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் க.சையத் அலிம், காட்பாடி நகரத் தலைவர் பொ.தயாளன், சதுவசாரி வீ.தமிழ்செல்வன், தி.க.சின்னதுரை உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி நன்றி உரையாற்றினார்.
