மாராச்சேரி, ஜூன் 18- திருவாரூர் மாவட்டம் மாராச்சேரி சுரேஷ் மலர்விழி இல்ல அறிமுக விழாவில் மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த் தன் வேம்பு கண்ணு இல்லத்தினை அறிமுக படுத்தியும் பெரியார், மணியம்மையார், தமிழர் தலைவர் படத்தினை மாநில விவசாய தொழிலா ளரணிச் செயலாளர் வீ.மோகன் திறந்து வைத் தார்.
அதனை தொடர்ந்து கழகச் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி திருவாரூர் மாவட்டச் செய லாளர் கோ.பிளாட்டோ, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், நகரத் தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றியத் தலைவர் ச.பொன்முடி, ஒன்றியச் செயலாளர் அ.அறிவழகன், நகரச் செயலாளர் நாகராஜன், ப.க.மாவட்ட துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, நகர இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ச.குமார், களப்பாள் சம்பத் குமார், ஆசைத்தம்பி, மகளிரணிப் பொறுப்பாளர்கள் சி.கலைவாணி, கி.கலாவதி, கலந்து கொண்டனர்.
