டெலிகிராம் செயலிக்குத் தடை விபத்து நடப்பதற்காக சாலையை மூடி விடுவார்களா? ஒன்றிய அரசுக்கு பொது மக்கள் கண்டனம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 17 “சாலையில் விபத்து நடக்கிறது என்பதற்காக, சாலையைச் செம்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த சாலையையுமே மூடிவிடுவார் களா?” என்று நீட் மறுதேர் வுக்காக டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள தடைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனமும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

டெலிகிராம் செயலி

மருத்துவ இளநிலை படிப் புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு காரணமாக இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. கடந்த தேர்வின் போது டெலிகிராம் செயலி மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டது சிபிஅய் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக் கவும், வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மேலும், ஜூன் 30-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியில் ‘எடிட்டிங்’ (Editing) வசதியும் முடக்கப்பட்டுள்ளது.

மாபியாக்களை விடுத்து செயலி மீது பாய்வதா?

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள முக்கிய விமர்சனங்கள்: முறைகேட்டா ளர்களைப் பிடியுங்கள், செயலியை அல்ல: வினாத்தாள் கசிவு மற்றும் கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்களையும், குற்றவாளிகளையும் கண்டறிந்து அவர்கள் மீதுதான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியைத் தடை செய்வது தீர்வாகாது.

அரசின் இயலாமையைக் காட்டுகிறது

முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய அரசு, தனது கடமையில் இருந்து தவறிவிட்டு ஒட்டுமொத்தமாகச் செயலியை முடக்குவது, நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது எனப் பொதுமக்கள் சாடி யுள்ளனர்.

“சாலையில் விபத்து நடக்கிறது என்பதற் காக சாலையைச் செம்மைப்படுத் துவதை விட்டுவிட்டு சாலையையே மூடுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோலத்தான் குற்றவாளி களைப் பிடிக்காமல் செய லியைத் தடை செய்வதும் உள்ளது” என்று பொதுமக்கள் குமுறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் மோசடி அழைப்புகள் வந்தால் 1930 என்ற எண்ணிலோ அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *