பிற்போக்குத்தனமான சக்திகளை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது ஜாதி மறுப்பு இணையருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடிப் பாதுகாப்பு

1 Min Read

புதுடில்லி,ஜூன் 17 டில்லியில் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையருக்கு, பெண்ணின் குடும்பத்தினரால் ஆணவக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தங்களுக்குப் பாதுகாப்பு கோரி அந்த இணையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று இணையர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டது.  இச்சூழலில், பெண்ணின் குடும்பத்தினர் அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்னதாக ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் எனக் கூறி, இணையர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இணையருக்கு ஆதரவாகவும், பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

நீதிபதிகள் இதுகுறித்துக் கூறுகையில்,

“இத்தகைய பிற்போக்குத்தனமான சக்திகளை (பெண்ணின் குடும்பத்தார்) ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் இந்த இணையரைத் தீவிரமாக வேட்டையாடி வருகிறார்கள். இது எவ்வகையிலும் சரியான நடைமுறை கிடையாது.”

இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கி ராஜஸ் தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *