சென்னையில் சாலைகளை அழகுபடுத்த 1200 காகிதப் பூச்செடிகள்! மாநகராட்சி நடவடிக்கை!

1 Min Read

பெரம்பூர், ஜூன் 16– சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகளை அழகுபடுத்த 1200 காகித பூச்செடிகள் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

சென்னையில் சாலை களை அழகுபடுத்த மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

குறிப்பாக, சாலை களின் இருபுறமும் அழகான செடிகளை வளர்ப்பதும், வண்ண ஓவியங்களை வரைவது, நீர்ஊற்று அமைப்பது போன்ற பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

அதன்படி, திருவிக நகர் மண்டலம் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 70ஆவது வார்டு மாத வரம் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே செடிகள் மற்றும் குப்பைகள் காய்ந்த நிலையில் இருந்துள்ளன.

அதனை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி அப்பகுதி யில் சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு 1800 காகித பூச்செடிகளை நட்டு வளர்த்துள்ளனர்.

தற்பொழுது அது நன்றாக வளர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து இதேபோன்று மற்ற பகுதிகளிலும் சாலை யின் நடுவே தடுப்புக்களில் உள்ள குப்பைகள் மற்றும் காய்ந்த செடிகளை அகற்றி கண்கவர் வகையில் செடிகளை வைக்க உள்ள தாக திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *