சென்னை, ஏப்.28- சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு துறைகளிலும், டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை, ‘நிலையான வளத் திட்டல் மற்றும் மேலாண்மைக் கான புவி அறிவியல் முறைகள்’ என்ற, ஓராண்டு புதிய டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல் துறையில், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத் திலும், ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாகவும், இந்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான மாணவர் சேர்க்கை, 2026 – 2027ஆம் கல்வியாண்டில் நடக்கிறது.
சென்னை பல்கலைக் கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில், அறிவியல் பாடப் பிரிவுகளை பயின்ற மாணவர்கள், இந்த டிப்ளமோ படிப்பில் சேரலாம் என, சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

