சென்னை, ஜூன் 16- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் இருந்து 18.7 கி.மீ தொலைவில், கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு (சிஅய்டியு) வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து இக்கூட்டமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில், “கடலை நம்பி வாழும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை இத்திட்டம் கடுமையாகப் பாதிக்கும். மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் போது பயன் படுத்தப்படும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் கடல்வாழ் உயிரி னங்களை அழிப்ப தோடு, சுற்றுச்சூழலுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்தின் போது ஏற்படும் பேரிரைச்சல் நில அதிர்வு களை உருவாக்கி, கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஏற்கெனவே சூழலியல் அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. எனவே, பரங்கிப்பேட்டை கடற்பகுதி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் எந்தவொரு கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு அனு மதி வழங்கக் கூடாது எனத் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஅய்டியு) சார்பில் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது
