திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது! உயா்நீதிமன்றம் கருத்து

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூன் 15– ‘சட்ட விதி மீறல்களைச் சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது’ எனக் கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் கட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ஆழ்வாா்ப்பேட்டையைச் சோ்ந்த ஏ.விஸ்வநாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், உலகளந்த பெருமாள் கோயில் அருகில் புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து 400 மீட்டா் தொலைவில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால் புதிய பேருந்து நிலையம் கட்டுவது அரசுக்குத் தேவையற்ற செலவு. புராதன, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு அருகில் பேருந்து நிலையம் கட்டுவது, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் புகாா் மனுக்கள் அனுப்பியும், அவை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடிப் படை சட்டவிதி மீறல்களை நிரூபிக்காமல், வெறும் ஒளிப்படங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் பொது நல வழக்கை ஏற்று, வளா்ச்சிப் பணிகளை முடக்க முடியாது.

சட்ட விதிமீறல்களைச் சுட்டிக் காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளை தரம் குறைக்க முடியாது. பேருந்து நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பதை முடிவு செய்யும் சிறந்த நீதிபதிகள் அதிகாரிகள்தான்.

நகா்ப்புற வளா்ச்சி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை மதிப்பீடு செய்ய வேண்டியது அதிகாரிகள்தான். சட்டவிரோதம், விதிமீறல்கள் நிரூபிக்கப்படாத நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *