எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்புப் படை’ இருந்து என்ன பயன்? – கனிமொழி எம்.பி. கேள்வி

1 Min Read

சென்னை, ஜூலை 15 திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்தி ருப்பதாவது:-

தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு ‘சிறப்புப் படை’யை உருவாக்கி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு.

சமூகநலத் துறை சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மகளிர் பாது காப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத் தில் எதற்கு தனியாக ஒரு ‘சிறப்புப் படை’ உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்புப் படை’ இருந்து என்ன பயன்? இவ்வாறு தனது பதிவில் கனிமொழி எம்.பி. தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *