புதுடில்லி, ஜூன் 15 மேற்கு ஆசிய நெருக்கடி யைச் சமாளிக்க முடியாமல், அதற்கு மாற்று வழியை கண்டறியாமல் ஒன்றிய மோடி அரசு மக்கள் தலையில் இடியை இறக்கி தொடர்ச்சி யாக சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனைக்கு மோடி அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் ஜூன் 11அன்று பிறப்பித்த அவசர உத்தரவில், “பெட் ரோல் பங்குகளில் ஏற்படும் தட்டுப்பாட்டைத் தடுக்க தொழிற் சாலைகளும், வணிக நிறுவனங்களும் சில் லறை பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு சாதாரண வாடிக்கையாளர் அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் மட்டுமே டீசல் வழங்க வேண்டும். இந்தத் தற்காலிக உத்தரவு அடுத்த 90 நாட்களுக்கு (3 மாதங்கள்) அமலில் இருக்கும். தேவைப்பட்டால் மேலும் நீட்டிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்
மோடி அரசின் இந்த உத்தரவு மருத்துவ மனைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொலைத் தொடர்புத் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் தடையின்றி இயங்க டீசல் ஜெனரேட்டர்கள் மிகவும் அவசியம். மின் விநியோகத்தில் ஒரு சில நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவப் பயனாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இத்தகைய சூழலில், தற்போதைய கட்டுப்பாட்டால் அவசர காலத்திற்குத் தேவையான டீசலைச் சேமித்து வைக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் அச்சமடைந்துள்ளன.
தொலைத்தொடர்பு
தொலைத்தொடர்பு கோபுரங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு டீசல் இன்றியமையாதது. மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் இந்த கோபுரங்கள் முடங்கினால், இந்தியாவின் சுமார் 130 கோடி வாடிக்கையாளர் களின் டேட்டா, அழைப்புச் சேவைகள் பாதிக்கப்படும். அவசரக் காலத் தொடர்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக ‘டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்கு நர்கள் சங்கம்’ தொலைத்தொடர்புத் துறைக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அய்டி நிறுவனங்கள் –
டேட்டா சென்டர்கள்
அதிகரித்து வரும் மின் தேவையைச் சமா ளிக்கவும், கணினிகள் முடங்காமல் இருக்கவும் அய்டி நிறுவனங்களும், தரவு மய்யங்களும் ஜெனரேட்டர்களையே நம்பியுள்ளன. சில்லறை விலையில் டீசல் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் கூடுதல் விலை கொடுத்து மொத்த விலையில் வாங்க வேண்டியிருக்கும். இதனால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதி கரிக்கும் என தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
வலுக்கும் கோரிக்கை
மொத்தமாக ஒப்பந்தம் செய்துள்ள பெரிய நிறுவனங்களுக்குப் பாதிப்பு இல்லை என்றா லும், சில்லறை விற்பனையை நம்பியிருக்கும் சிறிய நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகள் நலிவடையும் சூழல் உருவாகி யுள்ளது. எனவே, மருத்துவமனைகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கு இந்த 200 லிட்டர் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
