பெங்களூருவில் திராவிடர் எழுச்சித் திருநாள் கலைஞர் 103ஆம் பிறந்த நாள் விழா

பெங்களூரு, ஜூன் 14- கருநாடக மாநிலம் பெங்களூரில் முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம் பிறந்த எழுச்சித் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

7.9.2026 அன்று காலை 11 மணிக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் மூன்றாம் தளம் திராவிடர் அகம், பெரியார் மய்யம், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் முத்தமிழர் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக எழுச்சியுடன் டைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கருநாடக மாநிலத் திராவிடர் கழக மாநிலத் தலைவர் கே.குணவேந்தன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்புரையாற்றி இணைப்புரையும் நிகழ்த்தினார்.

கலைஞரின் வண்ணமிகு ஒளிப்படத் தினை கருநாடக மாநில திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். ஓசூர் மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன் மற்றும் கழக காப்பாளர் மு.சானகிராமன் இணைந்து கழகக் கொடியை உயர்த்தி வைத்தனர். கழகத் தோழர்கள் கரவொலி எழுப்பி முழக்கமிட்டனர்.

மூத்த உறுப்பினர்கள் பு.ர.கஜபதி செயலட்சுமி, காப்பாளர் மு.சானகிராமன் ஆகியோர் முன்னிலையேற்று உரை நிகழ்த்தினர்.

பெங்களூருத் தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் தி.கோ.தாமோதரன் அறிமுக உரை நிகழ்த்தினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், காடுகொண்டஹள்ளி சி,இராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க தமிழ், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில், கழகப் பொறுப்பாளர்கள் உரை நிகழ்த்தினர். கன்னட மொழியில் அகில கருநாடக விசார வாதிக்கே சங்கத் தலைவர் நாகேஷ் மற்றும் எம்பால் பகுதி பெரியார் அம்பேத்கர் அமைப்பின் செயலாளர் இராசு உரை நிகழ்த்தினர். இந்திரா நகர் பகுதி அகில இந்திய அம்பேத்கர் மாநில அமைப்பாளர் எம்.நாகேஷ் ஆங்கிலத்தில் சிறப்பான உரை நிகழ்த்தினார். இவர்களுடன் வருகை தந்த தோழர்களுக்கு கன்னடத்தில் எழுதப்பட்ட தந்தை பெரியார் எனும் நூலும், ஆங்கிலத்தில் அனுமகவுட எழுதிய ஆர்.எஸ்.எஸ்.இன் கெட்ட முகம் என்ற நூலும் அனைவருக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கருநாடக தமிழ் பத்திரிகையாளர் சமூகநீதி இயக்கத் தலைவர் முத்துமணி நன்னன் நெடிய உரை நிகழ்த்தினார். ஓசூர் மாவட்ட கழகத் தலைவர் சு.வன வேந்தன் கலைஞர் குறித்த அரிய உரை நிகழ்த்தினார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் குறித்தும், அறிஞர் அண்ணா அவர்களின் குறுகிய ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணம் அங்கீகாரம், தமிழ் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை சட்டம் நிறைவேற்றிய செயல்திட்ட முறைகள், முத்தமிழறிஞர் கலைஞரின் செயல் திட்டங்களையும், பெரியார் அவர்களின் செயல் திட்டங்களை சட்ட வடிவம் கொண்டு வரைமுறைகள், சட்டமன்ற அவை நடவடிக்கைகளில் ஒற்றை வரிகளில் நகைச்சுவை ததும்ப ஆற்றிய உரைகள், பெண்ணுரிமை இடஒதுக்கீடுகள் குறித்து நெடிய நேரம், உணர்ச்சித் தூண்டும் வண்ணம் மிகச் சிறப்பான வகையில் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிறைவாக மாநில துணைத் தலைவர் ஜெ.அருண் நன்றியுரை கூறி நிறைவு செய்தார். அனைவருக்கும் மதியம் பிரியாணி உணவு ஜெ.அருண் வழங்கினார்.

சீரிய செயல்பாட்டு, பகுத்தறிவாளர் சகாயராஜ் பிறந்த நாளை மகிழ்விக்கும் வண்ணம் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *