அரூர், ஜூன் 14- திராவிடர் எழுச்சி நாள், தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பரப்புரை பொதுக்கூட்டம் 9.6.2026 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட கழகச் செயலாளர் கு.தங்கராஜ் தலைமையில், ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பொன் பொன்.அய்யனார் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச் செல்வன், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் வெ.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளருமான அரூர் சா. ராசேந்திரன், மாவட்ட கலைத்துறை தலைவர் கவிஞர் கீரை. பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவாக மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, கழக சொற் பொழிவாளர் காஞ்சி கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தென்றல் பிரியன், வெங்கட் சமுத்திரம் தோழர் அன்புச்செல்வி, திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சதா சுர்ஜித், விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர் கவிஞர் பிரேம் குமார், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பாளையம் பசுபதி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ஜீவிதா மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ராஜவேந்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
