திருப்பத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டம்

திருப்பத்தூர், ஜூன் 14- திருப்பத்தூர் நகரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டம் 09.06.26 5.30 மணியளவில் ஏ.டி.ஜி. தேநீர் கடை அருகில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை ஏற்றார். நகரத்தலைவர் காளிதாஸ் வரவேற்புரையாற்றினார்.

தொடக்கவுரையாக மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், விடுதலை வாசகர்வட்ட மாவட்டத் தலைவர் எம். ஞானபிரகாசம் உரையாற்றினார்கள்.

மேலும் வே. அன்பு மாவட்டத் தலைவர் ப. க., எம். என். அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் வி. வா. வட்டம், கவிஞர் நா. சுப்புலட்சுமி உரையாற்றினார்கள்.

இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக பங்கேற்ற முனைவர். துரை. சந்திரசேகரன் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் அண்ணா சரவணன் ப.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய துரை சந்திரசேகரன் தமது உரையில் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் கொள் கையை ஏற்று அண்ணா வழியில் செய்திட்ட பல்வேறு சமூக சீர்சிருத்தத் திட்டங்களை விளக்கி உரையாற்றினார்கள்.

கலைஞர் அவர்கள் அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச் சராக பதவி வகித்தவர், மேலும் அவர் எதிர்கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தான் போட்டியிட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்சியாக 13 முறை வெற்றிபெற்றவர் என்ற சிறப்புக்கு உரியவர்.

மேலும், கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறிப்பாக இட ஒதுக்கீடு, கை ரிக்சா ஒழிப்புத் திட்டம், ஜாதி வேற்றுமைகளை களையும் சமத்துவபுரத் திட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம், விவசாயிகளின் விளைச்சலுக்கு இடைத் தரகர் இல்லாமல் விற்பனை செய்ய உழவர் சந்தை, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் அவர்கள் கல்வி தொடர கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி யும், தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும் தந்தை பெரியாரையும், அவர் கொள்கையையும் ஏற்றுத்தான் ஆட்சி செய்ய முடியும். அவர்களால் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று சிறப்புரையாற்றினார்.

இன்றைய இளைஞர்கள் அவர் ஏற்றுக்கொண்டு வாழந்த தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையை பின்பற்றி வாழ வேண்டும்.

இங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், தந்தை பெரியார் அவர்களை தனது கொள்கை வாரிசாக அறிவித்துத் தான் ஆட்சிக்கு வரமுடிகிறது. அவர்கள் முன்னெடுத்த கொள்கை திட்டங்களை தான் இங்கே தொடர முடிகிறது. ஆகவே கலைஞர் அவர்கள் என்றும் அவர் செய்திட்ட சமூக சீர்த்திருத்த நலத்திட்டங்கள் மூலமாக என்றும் வாழ்கிறார் என்று புகழராம் சூட்டி சிறப்புரையாற்றினார்.

பங்கேற்ற தோழர்கள்

கோ.அன்புச் சேரன் (நகரத் தலைவர் வாணியம்பாடி) பீமன் ஏ.டி.சித்தாரத்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றி யத் தலைவர்), கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர்  ப. க.) நா.நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்) மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலா ளர்), கே.மோகன் (மாவட்ட தலைவர் பெ.கட்டுமானத் தொழிலாளரணி), கோ.சங்கர் (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்) பச்சை முத்து (கழக தோழர்) சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்) கா. நிரன்ஜன் (மாவட்ட இளைஞரணிச் செயலா ளர்), அரவிந்த் (நகர இளைஞரணிச் செயலாளர்) க. முருகன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) லட்சுமணன்(லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன் (கற்பிபயிலகம்) தீபஜோதி (மகளிர் பாசறை) லாவண்யா (மகளிர் பாசரை) மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.

ப.க. மாவட்டச்செயலாளர் கோ.திருப்பதி நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *