காமேனியின் உடல் ஜூலை 9இல் அடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு

தெஹ்ரான், ஜூன் 14- தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28ஆம் தேதி அந்த நாட்டை தாக்கியது அமெரிக்கா. இந்த கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த அய்க்கிய அரபு அமீரகத்தின் சவுதி, குவைத், துபாய் உள்ளிட்ட நகரங்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது.
ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மய்யமான தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவில் உள்ள மதகுருவின் மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி அயத்துல்லா காமேனி (86) உள்பட முக்கியத்துவம் வாய்ந்த 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். காமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பெயர்த்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், 36 ஆண்டுகளாக ஈரானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த காமேனியின் உடல், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மஷ்ஷாத்தில் அவரது தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இமாம் ரெசா கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் உடல் ஜூலை 9ஆம் மஷ்ஹாத் நகரில் உள்ள அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நிகழ்வுகள் ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *