உலகிலேயே குட்டிகளை ஈன்றெடுக் கும் ஒரே ஆண் உயிரினம் கடற்குதிரை ஆகும். பெண் கடற்குதிரை இடும் முட்டைகளை தனது வயிற்று பையில் (Brood Pouch) சுமந்து பாதுகாக்கும் ஆண் கடற்குதிரை, அவை முதிர்ந்தவுடன் குட்டிகளாக வெளித்தள்ளுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 100 முதல் 2000 குட்டிகள் வரை பிறக்கும் இந்த அதிசய நிகழ்வு இயற்கையின் வியக்கத்தக்க படைப்பாக கருதப்படுகிறது.

இந்திய கடவுச்சீட்டு தரவரிசை சரிவு
ஹென்லி கடவுச்சீட்டு குறி யீட்டில் இந்தியா 78-ஆவது இடத் திற்கு சரிந்துள்ள தாக 2026 மே மாத தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 3 இடங்கள் வீழ்ச்சியாகும், இருப் பினும் இந்தியர்கள் 56 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.
தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமலும், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல்’ முறையிலும் செல்ல வசதிகள் உள்ளன.
