திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொறுப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில் சென்னை –பெரியார் திடலில் நடைபெற்றது.
10.06.2026 அன்று காலை 12.00 மணி அளவில் தொடங்கி நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் கடந்தகால செயல்பாடுகள் பற்றி பொறுப்பாளர்கள் எடுத்துக் கூறினார்கள். வருங்காலச் செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதலை புரவலர் தனது உரையில் சுட்டிக் காட்டினார். ‘‘திராவிடர் வரலாற்றின் உண்மை வரலாறு, திரிபுவாதங்களை உரிய காலத்தில், உரிய வகையில் விளக்கிடும் நிகழ்ச்சிகள், திராவிடர் வரலாறு சார்ந்த அகழாய்வு, தொல்லியல் குறிப்புகளை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படல் வேண்டும்’’ என புரவலர் குறிப்பிட்டுப் பேசினார். ஓராண்டு காலத்திற்குள் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் குறித்தும் – தலைப்பு, பேசிட வேண்டிய ஆய்வு அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பற்றியும் முன்னரே திட்டமிடல், உறுத் செய்திடல் அவசியம் என வலியுறுத்திப் புரவலர் பேசினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டிய வேலைத்திட்டம் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொறுப்பாளர்களாக கீழ்காண்போர் நியமிக்கப்பட்டனர்.
