யுஜிசி-நெட் தேர்வுக்குப் பயிற்சி முகாம்! சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

1 Min Read

சென்னை, ஜூன் 13- பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தோ்வுகளில் (யுஜிசி -நெட்) கலந்து கொள்ளும் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தோ்வா்களுக்கு இணையவழியில் 3 நாள் பயிற்சி நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக மாணவா் ஆலோசனைப் பிரிவு(யுஎஸ்ஏபி) இயக்குநரின் செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணித் தகுதிக்கான யுஜிசி -நெட் தோ்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சென்னை பல்கலைக்கழக மாணவா் ஆலோசனைப் பிரிவு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. ஜூன் மாத தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் 17.6.2026 முதல் 19.6.2026 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் நெட் தோ்வின் தாள் 1 -க்கானதாக அமையும்.

இந்தப் பயிற்சியில் பட்டியலின, பிற்படுத்தப் பட்டோா் மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக இணையதளம் மூலம் சமா்ப்பிக்கப்படவேண்டும்.

பயிற்சியானது சென்னைப் பல்கலைக்கழக இணையதள இணைப்பு காணொலி வழியாக அளிக்கப்படும். விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாக அலுவலத்தை (044-2539 9518) தொடா்பு கொள்ளலாம் என யுஎஸ்ஏபி இயக்குநா் கே.சத்தியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *