திராவிட மாடலும், ஆரிய மாடலும்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நவீன தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் இக்காலகட்டத்தில், நாட்டின் தலைநகரான டில்லியில் நிலவும் சூழல் நம்மைப் பின்னோக்கி, குறிப்பாகக் கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

டில்லி மாநகரில் காலை 8.30 மணிக்கே தொடங்கும் கதிரவனின் உக்கிரமான வெயில், மாலை 6 மணி வரை மக்களை வாட்டி வதைக்கிறது. மற்றொரு புறம், இரவு பகல் பாராமல் வீசும் கடுமையான அனல் காற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

டில்லியின் மூங்கில் பந்தல் அரசியல்

மத்தியில், மாநிலத்தில் மற்றும் டில்லி மாநகராட்சியில் என மூன்று எஞ்சின் ஆட்சி அமைப்பைக் கொண்டுள்ளதாகக் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க அரசு, இந்த கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களையும், சாலையோர பாதசாரிகளையும், கிக் வொர்க்கர்ஸ் (Gig Workers) எனப்படும் டெலிவரி ஊழியர்களையும் பாதுகாக்க ஒரு தற்காலிக ஏற்பாட்டைச் செய்துள்ளது. அதுதான் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மூங்கில் மற்றும் கோதுமை வைக்கோலால் வேயப்பட்ட பந்தல்கள் ஆகும்

கட்டுரை, ஞாயிறு மலர்

நவீன யுகத்தில் இத்தகைய பந்தல்கள் எவ்வித பாதுகாப்பையும் தராது என்பதுடன், ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட நொடியில் பொசுங்கி சாம்பலாகிவிடும் அபாயத்தைக் கொண்டவை.

இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான தற்காலிக அமைப்பை உருவாக்க, ஒரு பந்தலுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கு காட்டி மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

திராவிட மாடலின் நவீனப் புரட்சி!

இதற்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் உழைப்பாளர்களின் நலன் காக்க தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வெயிலிலும், மழையிலும் இடைவிடாது உழைக்கும் டெலிவரி பணியாளர்கள் மற்றும் அடித்தட்டு தொழிலாளர்கள் கோடைக்காலத்திலும் சரி, மழைக் காலத்திலும் சரி, பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் ஓய்வெடுக்கும் பொருட்டு குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய தனிச் சிறப்பாக ஓய்வு அரங்குகள் பொது இடங்களில் கட்டப்பட்டன பெருநகர சென்னை மாநகராட்சியின் நவீனக் கூடாரமாக நாம் இதனைத் தெளிவாகக் காண முடியும் .

கட்டுரை, ஞாயிறு மலர்

 

டில்லி ஆரிய மாடல் அணுகுமுறை தமிழ்நாடு திராவிட மாடல் அணுகுமுறை
மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய தற்காலிக பந்தல்கள் அமைப்பு. கிக் வொர்க்கர் களுக்காகக் கட்டப் பட்ட நவீன, குளிரூட்டப்பட்ட நிரந்தர ஓய்வு அரங்குகள்.
ஒரு தற்காலிக பந்தலுக்கு ரூ.50,000 செலவிடப்பட்டதாகக் கணக்கு. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் கவுரவத்திற்கும் முக்கியத்துவம் தரும் நிரந்தர உள்கட்டமைப்பு.

இது வெறும் இரு மாநிலங்களின் உள்கட்டமைப்பு சார்ந்த வேறுபாடு மட்டுமல்ல; மாறாக, உழைக்கும் வர்க்கத்தை நடத்தும் சமூக நீதி திராவிடமாடல் ஆட்சிக்கும், சமூகத்தில் அநீதி விளைவிக்கும்  கொள்கைகளைக் கொண்ட ஆரிய மாடல் ஆட்சிக்குமான அடிப்படை  கொள்கை வேறுபாடாகும்.

மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்த்து, தற்காலிக மற்றும் ஆபத்தான கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றுவதற்கும், அடித்தட்டு தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கவுரவமான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் இடைப்பட்ட இந்த முரண்பாடே நிஜமான மக்கள் நல அரசு எது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *