திராவிடர் எழுச்சி நாள் ஆவடி-பட்டாபிராம் பகுதி கழக சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

2 Min Read

பட்டாபிராம், ஜூன் 12- ஆவடி மாவட்டம் பட்டாபிராம் பகுதி கழக சார்பாக  “திராவிடர் எழுச்சி நாள் “மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் 08-06-2026 அன்றுமாலை 06-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் பா.தென்னரசு, துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஜெயராமன், ஆவடி மாவட்ட கழக மகளிரணித் தலைவர் சி.ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர் ம.சிலம்பரசன் வரவேற்புரையுடன் பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

முதலாவதாக தமிழ்முரசுவின் மந்திரமா?  தந்திரமா?  பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த சா.மு.அமுதநேசன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றிய பாடல்களை பாடியதை அடுத்து அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இரா.இராமலிங்கம் அவர்களது பேரன்கள் பெரியார் பிஞ்சுகள் மித்ரன்- முகிலன் ஆகியோர் கலைஞர் ஆட்சியின் சாதனைகளையும்,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகளையும்  சுட்டிக் காட்டினர்.

ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தி.மு.கழக தலைமை நிலையப் பேச்சாளர் க.மு.ஜான் ஆகியோர் உரையாற்றிய பின் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை கலைஞர் அவர்களின் சாதனைகளையும் திராவிடர் கழகத்தின் வேலைத் திட்டங்களையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன் ,கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம், ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, துணைத்தலைவர் சி.வச்சிரவேல், பூவிருந்தவல்லி பகுதி கழகத் தலைவர்  பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன்,திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இரா இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், திருநின்றவூர் ராணிரகுபதி, பெரியார்- அண்ணா- கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் பாசறை கோபால், ஆவடி எல்லம்மாள், தாம்பரம் மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், வை.கலையரசன், சிவகுமார், ஆவடி சுந்தர்ராஜன், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், அம்பத்தூர் ராம்குமார், ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் சுகந்தி, செயலாளர் அன்புச்செல்வி, பட்டாபிராம் நாகராஜ், வடசென்னை கழக தோழர் செல்லப்பன், பகுத்தறிவாளர் கழகம் கி.மு.திராவிடமணி, பெரியார் பிஞ்சுகள் தருண் இனியன், நன்னன் மற்றும் தி.மு.கழக தோழர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் நன்றி கூற  கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *