திரிபுரா அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை புதிய வேலை நேரமும் அறிவிப்பு!

2 Min Read

அகர்தலா, ஜூன் 11- திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் வேலை நாட்களில் அம்மாநில அரசு அதிரடி மாற்றம் செய்து புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன்படி, இனி வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் நலன் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி திங்கள் முதல் வெள்ளி வரை என வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அலுவலகங்கள் இயங்கும். வேலை நேரத்தைப் பொறுத்தவரை, தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் மாதத்தின் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மற்ற சனிக்கிழமைகளில் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வந்தன. தற்போதைய புதிய முடிவின்படி, அனைத்து சனிக்கிழமைகளுமே அரசு அலுவலகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக விடுமுறை நாள்களாக மாற்றப்பட்டுள்ளன.

பிளஸ்-2 விடைத்தாள் நகலை

இணையதளத்தில் பதிவிறக்கலாம்!

அரசு தேர்வுத்துறை தகவல்

சென்னை, ஜூன்.11- பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடைத்தாள் நகலினைப் பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக www. dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம்.

இந்த இணையதளத்தில் Higher secondary Examination’  என்ற வாசகத்தை அழுத்தினால், அதில் தோன்றும் Higher secondary March 2026-scan copy download என்ற வாசகத்தை கிளிக் செய்து, அதில் தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த 5, 6, 8, 9ஆம் தேதிகள் வரை பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் பத்திரிகை செய்திக்குறிப்பு என்ற வாசகத்தை அழுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும் நேற்று (10.6.2026) பிற்பகல் முதல் தமிழ் உள்ளிட்ட அனைத்து பகுதி 1 மொழிப்பாடங்கள் விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *