5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடி! அமலாக்கத்துறை விசாரணை

1 Min Read

புதுடில்லி, ஜூன் 10– 5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடைபெற்ற சைபர் குற்ற வழக்கு விசாரணையை அம லாக்கத் துறை தொடங்கி யுள்ளது.

இந்தியாவில் வாங்கப் பட்ட மேற்குறிப்பிட்ட சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்படும் மலேசியாவைச் சேர்ந்த ஒரு மோசடிக் கும்பலால் இந்தியாவில் பல்வேறு இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாம். இந்தியாவிலுள்ள சில முகவர்கள் இந்திய சிம் கார்டுகளை கம்போ டியாவில் இயங்கும் கும்பலுக்கு மலேசிய நாட்டவர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தக் கும்பல் இந்தி யாவில் பல தரப்பு மக்களிடம் நூறுகளில் செலுத்தும் ரூபாய்க்கு கோடிகளில் பணம் திருப்பி வழங்குவதாக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் 7 இடங்களிலும் பஞ்சா பிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், உள்ளூர் வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் தொடங்கி சைபர் மோசடிக்கு அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

சைபர் மோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஆய்வுக்குட்படுத்திய 2.3 லட்சம் சிம் கார்டு களில் ஏறத்தாழ 36,000 சிம் கார்டுகள் கம்போடி யாவில் இருந்து செயல் பட்டதும் அவற்றில் 5,300 சிம் கார்டுகள் இந்தியா வெங்கிலும் இணையவழி மோசடிகளுக்காக வாட்ஸ் ஆப் அழைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *