இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா

பெய்ஜிங், ஜூன் 10- சீனாவும், இந்தியாவும் ஒருவருக்கொருவரால் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபா் புதின் அண்மை யில் பிரபல செய்தி நிறுவனங் களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா – சீனா உறவு குறித்தும், இரு நாடுகளுடனும் ரஷ்யா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவு குறித்தும் பேசியிருந்தாா்.

அப்போது இரு நாடுகளுடனும் ரஷ்யா நல்ல நட்புறவைக் கொண்டுள் ளதாகவும், அதேநேரத்தில் அந்த 2 நாடுகளிடையேயான விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் புதின் தெரிவித்திருந்தாா்.

இந்தியா- சீனா இடையே நீண்டகாலமாக எல்லை விவகாரம் தொடா்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் 2020-ஆம் ஆண்டு தொடங்கி சுமாா் 4 ஆண்டுகளாக லடாக் எல்லையில் 2 நாடுகளும் படைகளைக் குவித்தன. எனினும் பிறகு நடைபெற்ற பேச்சு வாா்த்தைக்குப் பிறகு படைகளை விலக்கிக் கொண்டன. இந்தச் சூழ்நிலையில், ரஷ்ய அதிபா் புதினின் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்பட்டது.

இதுகுறித்து சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு 8.6.2026 அன்று பேட்டியளித்த அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு: இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் மற்றொன்றின் வளா்ச்சிக்கான வாய்ப்புகளாகவும், கூட்டுறவு பங்காளிகளாகவும் இருக்கின்றனவே தவிர, போட்டியோ அல்லது அச்சுறுத்தலாகவோ இல்லை என்ற நிலைப்பாட்டை உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும்.

இருதரப்பு விவகாரங்களை இரு நாடுகளும் உயா்ந்த ராஜீய கண்ணோட்டத்துடனும், நீண்ட கால நோக்குடனும், பரஸ்பர நம்பிக்கையுடனும், விரிவான கூட்டுறவுடனும் அணுக வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை சரியான விதத்தில் கையாள வேண்டும். சீனா-இந்தியா உறவுகள் சீராக வளரவும், அதை மேலும் ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் சீனா நெருங்கிய நட்புறவு வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லின் அளித்த பதில் வருமாறு:

இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வாா்த்தை, ஆலோசனை மூலம் தீா்ப்பதையும், இரு நாடுகளும் சோ்ந்து பிராந்திய அமைதி, உறுதித்தன்மைக்கு நடவடிக்கை எடுப்பதையும் சீனா ஆதரிக்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா இடையே நிலவும் நட்புறவு, அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலக அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கும் உதவியாக இருக்கும்.

ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்ல எங்கள் நாடு தயாராக உள்ளது. இந்தியா- சீனா எல்லை நிலவரம் ஒரே சீராக உள்ளது. எல்லை விவகாரம் குறித்துப் பேச்சு வாா்த்தை நடத்த சுமுகமான வழியை இரு நாடுகளுமே கடைப்பிடித்து வருகின்றன என்றாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *