இளமையுடன் வாழ தவிர்க்க வேண்டிய உணவுகள்!

2 Min Read

எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்கு சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் போன்றவை அவசியமாக இருந்தாலும், நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது உணவில்தான்.

நாம் சாப்பிடும் உணவுக்கும், நம்முடைய உடற்தகுதி, தோற்றம், வாழ்க்கைத் தரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு உண்டு. முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையை நீட்டிப்பதற்கு, உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவை பெரும்பாலும் உணவில் இருந்தே கிடைக்கும்.

சில வகை உணவுகள் உடலில் எதிர்மறையாக செயல்பட்டு, விரைவாக முதுமையான தோற்றத்தை உண்டாக்கும். அவற்றை தவிர்ப்பதன் மூலம் இளமையை தக்கவைக்க முடியும். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே…

உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டுக்கு சர்க்கரை அவசியம். அதேசமயம், அதிகப்படியான சர்க்கரை மூலக்கூறுகள் கொழுப்பாக மாறி உடலில் படியும். அதுமட்டுமில்லாமல் சருமத்தை இளமையாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் ‘கொலாஜன்’ எனப்படும் புரதத்தையும் சேதப்படுத்தும். இதனால் சருமத்தில் சுருக்கம், கோடுகள் போன்றவை ஏற்படும். தோலின் நெகிழ்வுத்தன்மை குறைந்து முதுமைத் தோற்றம் உண்டாகும். எனவே சர்க்கரை சேர்த்த மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், பழச்சாறு, இனிப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உடலில் தண்ணீர், தாதுக்கள் ஆகியவற்றின் அளவைப் பராமரித்தல், தசைகள் சுருங்குதல் மற்றும் தளர்த்துதல் போன்ற முக்கியமான செயல்பாடுகள் நடப்பதற்கு, ஒரு நாளுக்கு 500 மில்லி கிராம் உப்பு தேவை. அதிக உப்பை உட்கொள்வது குருதி அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். செல்களில் தண்ணீர் சேர்வதை அதிகரிக்கும். இதனால் விரைவாக முதுமையான தோற்றம் ஏற்படும். எனவே அதிக அளவு உப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிக அளவு காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், தோலில் உள்ள குருதி நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமம் சேதமடையும். இதுவும் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்.

‘டிரான்ஸ் பேட்’ எனப்படும் கெட்டக் கொழுப்பு, இதய ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், இளமையையும் குறைக்கும். இவை உடலின் வீக்கத்தை அதிகரிக்கின்றன. இதனால் சருமத்தில் உள்ள கொலாஜன் சேதமடையும். எனவே எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தரமில்லாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசி, கோதுமை போன்ற தானிய உணவு வகைகளை குறைத்துக்கொண்டு, புரதம் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து அதிகம் உள்ள தினை அரிசி, வரகு அரிசி, சாமை, குதிரைவாலி, பனிவரகு, மூங்கில் அரிசி போன்ற சிறுதானிய உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவற்றை முளை கட்டிய பிறகு சாப்பிடுவது ‘வைட்டமின் சி’யை அதிகரித்து இளமையைப் பாதுகாக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *