கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

< கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< குற்ற வழக்கில் சிக்கியுள்ள கோ எம்ப்ட் எடுடெக் நிறுவனத்திற்கு சி.பி.எஸ்.சி. ஒப்பந்தம் அளித்துள்ளது அம்பலம்.17 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் ஆய்வு நடத்த ரூ384 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சி.பி.எஸ்.இ.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< இந்தியாவில் ‘துணையின்றி’ வாழும் மக்கள் தொகையில் தமிழ்நாடு, கேரளா முன்னிலை:  தேசியப் போக்குக்கு மாறாக திகழும் தமிழ்நாடு மற்றும் கேரளா. ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில் துணையின்றி வாழ்வது போன்ற, தொடர்ந்து நீடிக்கும் பாலின இடைவெளியை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< ஓபிசி சலுகையை மராத்தா பிரிவினருக்கும் சேர்ப்பு: மராத்தா மாணவர்களுக்கும் அனைத்து ஓபிசி (OBC) கல்விச் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை மகாராட்டிரா அரசு நீட்டிக்கிறது. நேரடியாக ஜாதிப் பட்டியலில் சேர்ப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் மாநில அரசு அரசாணையை (GR) வெளியிட்டுள்ளது; அத்துடன் 2026-2027 கல்வியாண்டிற்கான உடனடி அமலாக்கம் மற்றும் நிதியுதவிக்கு உத்தரவிட்டுள்ளது.

தி இந்து:

< கிரேட் நிகோபர் திட்டம்; பேராசைக்கு பதிலாக பசுமையை தேர்ந்தெடுக்கிறோம்: அரசை வலியுறுத்த மக்களுக்கு ராகுல் அழைப்பு. “ஒரு தொழிலதிபருக்கு லாபம் ஈட்டித் தருவதற்காக 1.5கோடிக்கும் அதிகமான மரங்கள், பழமையான பவளப்பாறைகள் மற்றும் ஈடு இணையற்ற மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன” என ராகுல் கண்டனம்.

தி டெலிகிராப்:

< எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம்; முக்கிய ஆதரவை பாஜக குறி வைத்துள்ள நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து மோடி அரசு ‘புதிய முயற்சி’?

டைம்ஸ் ஆப் இந்தியா:

< என்.டி.ஏ. தேர்வு முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கோரும் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்; பிரதமர் மோடிக்குக் கடிதம்: கடந்த எட்டு ஆண்டுகளில் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்திய தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் குறித்து ஒன்றிய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *