சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் எம்எஸ்எம்இ திட்டங்கள்! பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்!

1 Min Read

சென்னை, ஜூன் 6– சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் எம்எஸ்எம்இ திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சார்பில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடனும், புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் அமைக்க 25 சதவீத மானியத்துடன் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது.

இதேபோல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் எஸ்சி, எஸ்டி தனிநபர், கூட்டாண்மை நிறுவனங்கள், அந்த சமூகங்களை சார்ந்த நிறுவனங்கள், பங்குதாரர்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 35 சதவீத மானியத்துடன், அதாவது அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கூடிய வங்கிக் கடனும், கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் கைவினைஞர்களை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் அடுத்த கட்டத்துக்கு மாற்றுவதற்காக 25 சதவீத மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை வங்கிக்கடனும் அளிக்கப்படுகின்றன.

இதுதவிர தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக பெண் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களுக்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *