காங்கிரஸ் கூட்டணி முறிவு மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கீடு

1 Min Read

சென்னை, ஜூன் 5 மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு இடையே, காங்கிரஸ் கட்சியுட னான கூட்டணியை திமுக அதிகாரப் பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் தனியாக அமர்வதற்கு மக்களவை செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி அதிரடியாக விலகியது. மேலும், தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளித்தது. இந்த அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, காங்கிரசுடனான தங்களது கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக அறிவித்தது. கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு திமுக மக்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. அவசர கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: “மாறிவரும் அரசியல் சூழலால் காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பில் அமர்வது பொருத்தமற்றது. ஆகவே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத தனி இருக்கை அமைப்பை ஒதுக்கித் தர வேண்டும்.” திமுகவின் இந்த கோரிக்கையை மக்களவை செயலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமரும் பகுதிகளில் இருந்து விலகி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக இருக்கை அமைப்பை அது ஒதுக்கியுள்ளது.  தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய இடங்களில் வசதியாக அமர்வதற்கான தனி இருக்கை மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *