கூகுள், அமேசான் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடும் – பில்கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீவிரமடைந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் இதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து உள்ளன. கடந்த சில மாதங்களில், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் ஓபன்ஏஅய் ஆகியவை தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் வலுவான போட்டியாளராக இருப்பதை நிரூபிக்க செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது.

இருப்பினும், உலகின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிரது. இது குறித்து பில் கேட்ஸ் கூறும் போது செயற்கை நுண்ணறிவு எழுச்சியானது இ-காமர்ஸ் நிறுவனங்களை அழித்து விடும் என்று அண்மையில் கூறினார். பயனர்களின் நேரத்தைச் சேமிக்க சில பணிகளைச் செய்யக்கூடிய தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்கி நிர்வகிக்கும் டெவலப்பர் மட்டுமே செயற்கை நுண்னறிவு பந்தயத்தில் வெற்றி பெறுவார் என்று கேட்ஸ் கூறினார்.

 

அறிவியல் துணுக்குகள்

  1. வாட்டர்லூ பல்கலை விஞ்ஞானிகள், பெங்குவினின் சிறகுகளை மாதிரியாக கொண்டு ஒரு, ‘ஸ்மார்ட்’ துணியை உருவாக்கியுள்ளனர். இது, வெப்பம் மற்றும் குளிர்ச்சி என்று இரு நிலைகளுக்கும் மாறிக்கொள்ளும் திறனுடையது. இது, தட்பவெப்ப தகவமைப்பு திறன் கொண்ட ஆடைகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு கட்டடங்களுக்கு வழிவகுக்கும்.
  2. டப்ட்ஸ் பல்கலை ஆய்வாளர்கள், பட்டு இழையிலுள்ள புரதத்தை, குண்டு துளைக்காத, ‘கெவ்லார்’ இழையுடன் இணைத்து, வலுவான, நெகிழ்வு தன்மை கொண்ட உயிரி மருத்துவப் பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த கலப்பு இழைகள், உடலுக்குள் வைத்து தைக்கப்படும் மருத்துவக் கருவிகள், அறுவை சிகிச்சைக்கான தையல் இழைகள் மற்றும் திசு பொறியியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
  3. ஜூரிச் நகரிலுள்ள ஈ.டி.எச்., ஆராய்ச்சி நிலையத்தின் பொறியாளர்கள், மனித இயக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும் மென்மையான ரோபோ தசைகளை முப்பரிமாண அச்சு முறையில் தயாரித்து உள்ளனர். அழுத்தப்பட்ட காற்று மற்றும் பாலிமர்கள் மூலம் இந்த செயற்கை தசைகள் சுருங்கி விரிகின்றன. இது, தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு ரோபோக்களுக்கு பலம் தர உதவும்.
  4. ஸ்பெயினிலுள்ள ஆய்வாளர்கள், கடல் அலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும், ‘மார்மோக் – ஏ – 5’ என்ற அலை-யாற்றல் மாற்றியை உருவாக்கியுள்ளனர். இந்த மிதக்கும் பிரமாண்ட கருவி, அலைகளின் இயக்கத்தை உள்வாங்கி, டர்பைன்கள் மூலம் மின்சாரமாக மாற்றுகிறது. 42 மீட்டர் உயரமுள்ள இக்கருவி, கடல் அலை மின்சார தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.
  5. பற்களின் ஆரோக்கியத்திற்கு, ‘பிளாஸ்’ எனப்படும் பிளாஸ்டிக் நுால் பயன்படுகிறது. ஆனால், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அது வழிவகுக்கிறது. இதை தவிர்க்க, பல முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ஸர் என்ற பல் இடுக்கு துாய்மை இழையை, கனடாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *