டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிளஸ் 2 தேர்வில் டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு: சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் அதிரடி மாற்றம்: ஓஎஸ்எம் கொள்முதல் குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு; மாணவர்கள் கொந்தளிப்பால் ஒன்றிய அரசு நடவடிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்; இல்லையேல் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (COCKROACH JANTA PARTY) இயக்கத்தில் இணைவேன் – கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் வலியுறுத்தல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சி.பி.எஸ்.இ-யில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஒரு ‘மூடிமறைப்பு முயற்சி’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு; ‘திரைவழி மதிப்பெண் வழங்கும் முறை’ (OSM) விவகாரத்தில் பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்
தி இந்து:
* ‘திருமணம் ஒரு மகளுக்கும் அவளது குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பைத் துண்டிப்பதில்லை’. திருமணம் ஆனவர் என்ற காரணத்தை மட்டும் கொண்டு, கருணை அடிப்படையில் வழங்கப்படும் அரசுப் பணியை (COMPASSIONATE APPOINTMENT) ஒரு மகளுக்கு மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அரசியலமைப்பு நெறிமுறைகளையும் பொறுப்புடைமையையும் காப்பதில் தவறிவிட்டார் என்று தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முந்தைய நாள் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.
– குடந்தை கருணா
