‘யுபிஅய்’ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

சென்னை, ஜூன் 2- யுபிஅய்யில் நடைபெறும் சில முறை கேடுகளை தவிர்க்க ஒன்றிய அரசு அவ்வப்போது புதிய பாதுகாப்பு அம்சங் களை அறிமுகம் செய்து வருகிறது. டிஜிட்டல் முறையில் தற்போது வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துவிட்டது. பணம் அனுப்புவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளுக்குச் சென்று கால்கடுக்க நின்ற கால மெல்லாம் மலையேறிவிட்டது எனச் சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது.

வங்கி பக்கமே போகாமல் பணப் பரிவர்த்தனையை கைப்பேசி மூலமே செய்து முடித்துவிடலாம். ‘ஆன்லைன் ஷாப்பிங்’ முதல் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்புவது வரை சில நொடி களில் அனுப்பும் வசதி வந்துவிட்டது. அதிலும் யுபிஅய் வந்த பிறகு பெட்டிக் கடை முதல் ‘ஷாப்பிங் மால்’ வரை அனைத் திலும் எளிதாக பேமெண்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் யுபிஅய்யில் சில முறை கேடுகளும் நடைபெறுகின்றன. இவற்றை தவிர்க்க ஒன்றிய அரசு அவ்வப் போது புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் ஜூன் 1 முதல் புதிய பாதுகாப்பு அம்சத் தைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒரு வருக்குப் பணம் அனுப்பும்போது, பய னர்கள் தங்களது ‘யுபிஅய்பின்’ எண்ணை உள்ளிடுவதற்கு முன்பாகவே, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் திரை யில் தோன்றும். இதன் மூலம் தவறான நபர் களுக்குப் பணம் மாறுவது முற்றிலும் தடுக்கப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *