தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை! 100 நாள் வேலைத் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்!

2 Min Read

தூத்துக்குடி, ஜூன் 2- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் த்தின் மாவட்டச் செயலாளர் புவி ராஜ் தலைமையில், எப்போதும் வென்றான், கணக்கன்கட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மையே பிரதான தொழி லாக உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரக வேலை உறுதித் திட்ட வேலை கள் எதுவும் நடைபெறாததால் கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்களின் வாழ்வாதாரத் தைக் காக்க உடனே வேலை வழங்கிட வேண்டும் என்ற பெண்க ளின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இது குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

தொழிலாளியின் நேர்மை!

சாலையில் கிடந்த ரூ.20 லட்சம் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

பீமாவரம், ஜூன் 2- ஆந்திராவில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் சாலையில் கிடந்த பையை கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், மன்டபேட்டா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம் ராஜு என்பவரின் மகள் சிறீலேகா, தனது குடும்பத்தாருடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக லக்கவரம் கிராமத்துக்கு ஆட்டோவில் சென்றார். திருமண வீட்டுக்குச் சென்ற சிறீலேகா, தன்னிடமிருந்து ஒரு பையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மன்டபேட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த வழியாக சென்ற விவசாய தொழிலாளி லட்சுமண குமார், அந்தப் பையை கண்டெடுத்துள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அதில் நகைகளும் சிறீலேகாவின் ஆதார் அட்டையும் இருந்துள்ளது. இரவு நேரமாகி விட்டதால், மறுநாள் காலை அந்தப் பையை காவல் நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து, நகைகள் இருந்த அந்தப் பையை சிறீலேகாவிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். லட்சுமண குமாரின் நேர்மையை காவல் துறையினரும் சிறீலேகாவும் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *