இனமானக் கேடயம் ‘விடுதலை’ 92ஆம் ஆண்டு விழாவில் ஆசிரியர் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம், கழகச் செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கொடுகையூர் தே.செ. கோபால், வழக்குரைஞர் குமாரதேவன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன் ஆகியோர் பயனாடை அணிவித்து விடுதலை சந்தாக்களை வழங்கினர்.
