மெரினா கடற்கரையில் குதிரைச் சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரையோட்டி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை, ஜூன் 1- மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குதிரையோட்டியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோடை விடுமுறை என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் (30.5.2026) வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மெரினா கடற்கரையில் குதிரை சவாரியும் களைகட்டியது. 6 வயது சிறுமி குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் நிதிஷ்(20) என்பவரின் குதிரையில் சிறுமியை ஏற்றியுள்ளனர். அப்போது குதிரையோட்டியான நிதிஷ் சிறுமியை குதிரையின் மீது தன்னுடன் அமரவைத்து சவாரியில் ஈடுபட்டார். அப்போது சிறுமியிடம் குதிரையோட்டி ‘கீழே விழுந்துவிட போகிறாய் என்னை கெட்டியாக பிடித்து கொள்’ என கூறி குதிரையை வேகமாக ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை குதிரையோட்டி ஆபாசமாகவும், பாலியல் ரீதியான செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி குதிரையில் இருந்து கீழே இறக்கிவிடும்படி கூறி அழுதுள்ளார். ஆனாலும் குதிரையோட்டி சிறுமியிடம் குதிரையில் அமர்ந்தபடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமியை இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுள்ளார்.

சிறுமி அழுதபடி இருந்ததை பார்த்த அவரது பெற்றோர் என்ன என்று கேட்டனர். அதேநேரம் சிறுமியின் ஆடைகளும் கலைந்து இருந்தது. சிறுமி நடந்ததை அவரது பெற்றோரிடம் கூறி அழுதார். சிறுமியின் பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் குதிரையோட்டியை பிடித்து சரமாரியாக தாக்கி மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *