தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 27 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18இல் தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை எம்.பி. உட்பட நாடு முழுவதும் 27 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (1.6.2026) தொடங்குகிறது.

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவைஎம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமாக நடைபெறும் தேர்தல் மூலமாகவும் 3 இடங்கள் இடைத்தேர்தல் வாயிலாகவும் நிரப்பப்பட உள்ளன.

ஆந்திரா, கருநாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் 2 இடங்கள், மணிப்பூர், அருணாச்சல், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் காலியாகின்றன.

மேலும், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியிலிருந்து கடந்த மே 7ஆம் தேதி விலகினார். அவரது பதவிக் காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. அதற்குள் அவர் பதவி விலகியதால், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார் கடந்த மே மாதம் 6ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி காலம் 2028ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி முடிகிறது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உயிரிழந்ததால், மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராக சுனேத்ரா பவார் பதவியேற்றார். அதன்பின், அவர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.வானார். அதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (இன்று) ஜூன் 1ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து இன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 8ஆம் தேதி கடைசி நாள். ஜூன் 9ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவைத் திரும்பப்பெற ஜூன் 11ஆம் தேதி கடைசி நாள். ஜூன்18ஆம் தேதி காலை 9 மணி முதல்மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் ஒரு காலியிடத்தைத் தவெக எளிதாக கைப்பற்றும். அந்த இடத்துக்கு தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா? அல்லது கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு வரைநிறுத்தலாமா என தவெக கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தவெக.வுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை அமைச்சரவையில் இடம் வகிக்கின்றன. அதேநேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் சேரவில்லை. எனவே, ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதால் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. ‘சீட்’ வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *