பழனி, மே 31- 30-5-2026 அன்று மாலை 5-30 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் நகரச் செயலாளர் செந்தில்குமார், நகரத் தலைவர் அழகர்சாமி, ப.க மாவட்டத் தலைவர் திராவிடச்செல்வன், இளைஞரணி அறிவழகன், ஆயக்குடி கிளைச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
எதிர்வரும் 12-6-2026 அன்று கலைஞர் பிறந்த நாளை திராவிடர் எழுச்சி நாளாக பழனியில் கழக பேச்சாளர் நாகை.மு.இளமாறனை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவதெனவும்,
மாதம் இருமுறை கிராமப் பிரச்சாரங்கள் நடத்துவதெனவும், மாதந்தோறும் மாணவர் சந்திப்பு நிகழ்வுகள் நடத்துவதெனவும்,
இயக்க ஏடுகளாம் விடுதலை, உண்மை, மார்டன் ரேசன்லிஷ்ட் ஆகியவற்றிற்க்கு சந்தா திரட்டுதல் எனவும் தீர்மானமும் நிறைவேற் றப்பட்டன.
இறுதியாக சி.இராதா கிருட்டிணன் நன்றி கூறினார்.
