எபோலா வைரஸ் பரவி வரும் காங்கோவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆய்வு

1 Min Read

புனியா, மே 31- காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும் எபோலா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் காங்கோ நாட்டுக்கு வருகை புரிந்துள்ளார். காங்கோ பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ், ‘‘நோயின் மையப்பகுதியிலேயே அதனை எதிர்த்துப் போராடத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதும், தேவைப்படும் ஒவ்வொரு உதவியையும் தொடர்ந்து அளிப்பதுமே இதை சமாளிப்பதற்கான சிறந்த வழியாகும்.

906 பேருக்கு சந்தேகத்திற்கிடமான நோய்த் தொற்றுகளும், 223 சந்தேக மரணங்களும் பதிவாகி உள்ளது. இது ஒரு கடினமான சூழ்நிலை . காங்கோ இதற்கு முன்பும் பல முறை எபோலா வைரஸை எதிர்கொண்டுள்ளது. இந்த நோய்ப் பரவலை மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். பின்னர் புனியா நகருக்கு சென்றுஅங்குள்ள சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *