பொருளாதார நெருக்கடி: உக்ரைனுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி உதவி அய்ரோப்பிய யூனியன் ஒப்புதல்

1 Min Read

கீவ், ஏப். 25- ரஷ் யாவுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடும் போர் புரிந்து வரும் உக்ரைன் நாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நிதி நெருக் கடியில் சிக்கித் தவித்து வருகிறது. போருக்காகத் தன் கஜானாவைக் காலி செய்துள்ள உக்ரைனுக்கு. புதிய உயிர் கொடுக்கும் வகையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி (90 பில்லியன் யூரோ) நிதியுதவி வழங்க அய் ரோப்பிய யூனியன் அதி காரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், சமீபத்திய தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து அங்கு அமைந்த புதிய அரசு, இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பல மாதங்களாக முடங்கிக் கிடந்த நிதி சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிதியுதவி குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில் “இந்த நிதி எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதி. இருப்பினும், இது முழுமையானது அல்ல. எங்களின் ஆயுதத் தொழிற்சாலைகளின் முழுத் திறனில் 60 சதவீதத்தை மட்டுமே இந்த நிதியால் பயன்படுத்த முடியும். மின்சாரக் கட்ட மைப்பைச் சீரமைக்க இன்னும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.” என உருக்கமாக தெரிவித் துள்ளார்.

ஜூன் மாதத்துக் குள் இந்த நிதி கிடைக் காவிட்டால் அரசு ஊழி யர்களுக்குச் ஊதியம் வழங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது இந்த நிதி உக்ரைனுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *