மாடாக மாறிய மனிதர்: நகைக்கடை அதிபரை நம்ப வைத்த தந்திரப் ‘பார்ப்பனர்’!

1 Min Read

கருநாடக மாநிலம் மங்களூருவில் அண்மையில் ஒரு நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வியாபாரம் செழிக்கும்!

புதிதாகத் தொழில் தொடங்கும் எவரும் வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இதற்காக அந்த நகைக்கடை உரிமையாளர் ஒரு ஜோதிடரை அணுகி ஆலோசனைக் கேட்டுள்ளார்.

அந்த ஜோதிடரோ, “புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கடை முழுவதும் ஒரு பசுமாட்டைச் சுற்றி வரச் செய்தால், மகாலட்சுமியின் அருள் கிடைத்து வியாபாரம் செழிக்கும்” என்று ஒரு யோசனையைக் கூறியுள்ளார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஜோதிடரின் வாக்கை வேதவாக்காகக் கருதிய உரிமையாளர், பசுமாட்டிற்கு ஏற்பாடு செய்ய முயன்றார். அப்போது அங்கிருந்த ஒரு தந்திரப் பார்ப்பனர் குறுக்கிட்டு, “பசுமாடு எதற்கு? அது கடையை அசுத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக நானே மாடு வேடமணிந்து வந்து பூஜைகள் செய்து தருகிறேன். பசுமாட்டிற்கு கொடுக்க நினைத்த தட்சணையை எனக்கே கொடுத்துவிடுங்கள்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மாடு வேடத்தில் பார்ப்பனர்!

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் படத்தில் உள்ளவாறு மாடு போன்ற முகமூடியை அணிந்து கொண்டு, கடைக்குள் விசித்திரமான முறையில் பூஜைகளைச் செய்துள்ளார்.

நிஜமான பசுமாட்டை அழைத்து வந்து கோ பூஜை செய்வதற்குப் பதிலாக, ஒரு மனிதர் மாடு வேடமிட்டு ஆடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படங்கள் வெளியானதும், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“பசுமாட்டிற்குப் பதில் மனிதனே மாடாக மாறியது காலத்தின் கொடுமை” எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு ஒருவரைச் சிந்திக்க விடாமல் செய்கின்றன என்பதற்கு இந்த மங்களூரு நகைக்கடை சம்பவமே ஒரு சாட்சி. “பணமென்றால் பார்ப்பான் பசுவாகவும் மாறுவான்” என்றொரு புதுமொழிக்கு வழி கொடுத்துள்ளார் அப்பார்ப்பனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *