தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருமொழிக் கொள்கை அமைச்சர் ராஜ்மோகன்

1 Min Read

சென்னை, மே 29 சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார்.

அப்போது, அரசுப் பள்ளியில் சேர்ந்த மழலைகளை வாழ்த்தி மாலை அணிவித்து அமைச்சர் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,” தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

‘‘இந்த ஆண்டு 1.52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகளுடன் கூடிய கழிவறைகள் திட்டத்திற்குத் தான் முதல் கையெழுத் திட்டுள்ளேன்.’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *