சென்னை, மே 28 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத் துவதில் அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தின் மாநிலத் தலைவர் கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வூதி யத்தை 7,850 ரூபாயாக உயர்த்த கோரி போராடி வந் தோம். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓய்வூதியத்தை உயர்த்த கோரினார். அதனையேற்று ஜன.20 ஆம் தேதி ஆளு நர் உரையில் அறிவிக்கப் பட்டு, ஜன.24 ஆம் தேதி ஓய்வூதியம் உயர்த்தப்பட் டது. அதற்கான அரசாணை பிப்.13 ஆம் தேதி பிறப்பிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி முதல் கணக் கிட்டு அரசாணையை அமல்படுத்த வேண்டு மென்று அய்சிடிஎஸ் திட்ட இயக்குநரும், சமூக நல இயக்குநரும் உத்தரவிட்ட னர். ஒரு சில மாவட்டங் களில் இதன்படி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அரசாணை வெளியான பிப்.13 முதல் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆணை யிட்டுள்ளது. இது கடந்த கால நடைமுறைகளுக்கு முரணானது. எனவே, பிப்.1 முதல் கணக்கிட்டு புதிய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்” எனக் கூறப் பட்டுள்ளது.
