பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் 10 நிமிட சந்திப்பு

2 Min Read

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்
மீனவர்கள் மீட்பு, மேகதாது அணை எதிர்ப்பு,
கல்வி நிதிக்கான கோரிக்கைகள்

புதுடில்லி, மே 28 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், தனது முதல் அரசு முறைப் பயண மாகத் தலைநகர் டில்லிக்குச் சென்றுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் பய ணம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் அவருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு

விமானம் மூலம் டில்லி சென்ற டைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்திக்கப் புறப்பட்டார்.

பிரதமர் மோடியுடன் 10 நிமிடச் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்யின்
4 முக்கிய கோரிக்கைகள்

மாலை 5 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். இந்தச் சந்திப்பின்போது முதல மைச்சருக்குப் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையின் போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகளைப் பிரத மரிடம் முதலமைச்சரிடம் ஜோசப் விஜய் வலியுறுத்தினார்.

மாநில அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும்.

இலங்கைச் சிறையில் வாடும் 58 தமிழ்நாடு மீனவர்களை மீட்பதுடன், அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் 266 படகு களையும் மீட்டுத் தர வேண்டும்.

தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு மய்யம் ஒன்றை அமைத்திட வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டு வதற்கு எக்காலத்திலும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கை களை அவர் பிரதமரிடம் விடுத்தார்.

ஒன்றிய நிதியமைச்சருடன்

சந்திப்பு

டில்லியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (27.5.2026), இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவிலேயே மிக விரை வான பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்க ளில் முதலீடு செய்வது இன்றி யமையாததாகும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்கள் (Industrial Corridors) ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டின் பொருளாதா ரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் மிக முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்துவது அவசியமாகும். எனவே, இந்த மூன்று நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்ப டுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொழில், கல்வி மற்றும் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்திட ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என இச்சந்திப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்  கேட்டுக்கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *