த.வெ.க. அரசுக்கு – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

2 Min Read

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ‘Scam’ செய்வதா?

சென்னை, மே 27 – ‘‘பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் Scam செய்வதா?’’ என்று த.வெ.க. அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘‘5 ஏக்கருக்கு குறை வாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கி யில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்’’ என அறிவித்தது.

அதாவது, குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெருவிவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி என அறிவித்தது. ஆனால், தற்போது அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு படி நிலைகளில் தள்ளுபடி அறிவித்துள்ளது த.வெ.க. அரசு.

மேலும், 2025 மே மாதம் முதல் 2026 பிப்ரவரி வரையில் பெற்ற கடன்களில் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலதனச் செலவு அதிகரிப்பு, இடு பொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரி டர்கள், நீர்ப் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதுமான விலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவ சாயிகள்பல்வேறு நெருக்கடிகளையும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் த.வெ.க. அரசு விவ சாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளை ஏமாற்றியுள்ளது த.வெ.க. அரசு.

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டி ருப்பதாவது:–

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயி களுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடிஎன்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயி களுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கெனவே, 200 யூனிட் வரை கட்ட ணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், மோசடி (SCAM) செய்கிறார்கள்.

இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்க ளுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சி.எம். சார்? (CM saar?)

இவ்வாறு சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *