பசுக்களைப் பாதுகாக்கக் கோரி-அங்கேயும் சென்று அக்கப்போர்
ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் நடத்திய பேரணி
ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் நடத்திய பேரணி
மெல்பேர்ன், மே 26- ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங் களைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, பசுக்களைப் பாது காப்பதற்காகப் புதிய அமைப்பைத் தொடங்கி விழிப்புணர்வு பேர ணியை நடத்தியுள்ளனர்.
‘மதர் புரொடெக்ஷன்’ அமைப்பு தொடக்கம்
பசுக்கள் மனிதகுலத்திற்குச் செய்யும் நன்மைகளை வலியுறுத்தி யும், அவற்றைக் கொல்லக் கூடாது என்பதை உலகிற்கு உணர்த்தவும் “மதர் ஆவ் கவு சேவ் த வேர்ல்ட்” என்ற முழக்கத்துடன், “மதர் புரொடெக்ஷன்” (Mother Protection) என்ற புதிய அமைப்பை இந்த இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் மெல்பேர்ன் நகரின் முக்கிய வீதிகளில் பசுக்களை பாதுகாக்க கோரியும் அவற்றை கொல்ல அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் முதலாவது விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பசு பாதுகாப்பை வலியுறுத்தும் பிரத்யேக ‘டீ-சர்ட்’ அணிந்திருந்தனர்.
“பசு ஹிந்துக்களுக்கு மட்டுமே யான புனித விலங்கு அல்ல; அது இந்த உலகின் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமே ஒரு தாய் போன்றது. எனவே, பசுக்களைக் கொல்ல அனுமதிக்கக் கூடாது!” என்று ஆக்ரோஷமாகவும் முழக்கமிட்டவாறு வீதிகளில் நடந்து சென்றனர். வெளிநாட்டு மண்ணில் இந்திய இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த பசு பாதுகாப்பு பேரணி, அங்குள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதுபோன்ற செயல்களால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள்.
