இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கீழவாளாடி, மே 25- இலால்குடி கழக மாவட்டம் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்)  கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல நமது கழக இலட்சியக் கொடியே பாதை காட்டியது.

இலால்குடி மாவட்டக் கழகத் தலைவர் வீ.அன்புராஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பாபுராஜ், மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், இலால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி.ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர். தலைமை ஆசிரியர் மு.செல்வி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அவனிகோ இளந்திரையன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பயிற்சி பட்டறையை நெறிப்படுத்தியும், மாணாவர்கள்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார்.

தொடர்ந்து தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி  முதல் வகுப்பினை தொடங்கினார்.

பார்ப்பனப் பண்பாட்டுப் படை யெடுப்பு மற்றும்  ஜாதி ஒழிப்பு போரில் திராவிடர் கழகம் நேற்று- இன்று – நாளை என்ற தலைப்பில் இரு வகுப்புகளாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வி.சி.வில்வம் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  உரை காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. மாணவர்கள் உற்சாகமாக கவனித்தனர்.

தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் மற்றும் பேய் ஆடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற இரண்டு தலைப்பில் இரண்டு வகுப்பாக ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பெடுத்தார்கள்.

நிகழ்வில்  பொதுக் குழு உறுப் பினர் முத்துசாமி, மாவட்ட ப.க. செயலாளர் இளஞ்சேட் சென்னி, முன்னாள் மாவட்ட தலைவர் சிவ சங்கரன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, நகரச் செயலாளர் க. பாலச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி தலைவர் யுவராஜ், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் சண்முகம் கீழவா ளாடி மகளிர் அணி தலைவர் வசந்தகுமாரி, மகளிரணிச் செயலா ளர் வள்ளியம்மாள், பாடகர்  பொற் செழியன், சந்திரசேகரன், மகளிரணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பயிற்சிப் பட்டறை காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணிக்கு முடிவடைந்தது.

பயிற்சிப் பட்டறையில் 41  மாண வர்கள் பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் அனைத்து மாண வர்களும் சிறப்பாக குறிப்பு எடுத்தனர். அதில் நான்கு மாண வர்களை தேர்வு செய்து கழக புத்த கம் பரிசாக வழங்கப்பட்டன.

பெருவளப்பூர் -கு.காயத்ரி, கீழவா ளாடி-செ.அ. அறிவு சுடரொளி. வாழ்மாழ்பாளையம்-த. ராவணன், இலால்குடி-நிசிதா ஆகியோர் நன்றாக குறிப்பெடுத்து கழக புத்தகம் பரிசு பெற்றனர்.

பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையைப் பற்றி பயிற்சி மாணவர்கள் கருத்துகள்

ஆண் பெண் சமம். பெண் உரிமை. பெண் படிப்பு. இவை அனைத்தும் பெரியாருடைய உழைப்பு பெரியாரால் தான் நாம் படிக்கின்றோம். இந்த இடத்திற்கு வந்துள்ளோம் என்பதனை இந்த பயிற்சியின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

நான் இதுவரை எந்த கூட்டத் திற்கும் போனதில்லை ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கையும் இருந்தது ஆனால் இப்போது இங்கு வந்ததினால் கடவுள் நம்பிக்கை இல்லை கடவுள், பேய், அனைத்தும் பொய்ப் பித்தலாட்டம். நம் நம் மீது நம்பிக்கை வைத்தால் கடவுள் என்ற ஒன்று ஏதும் தேவையில்லை அதை நம்ப வேண்டாம்.

என்று பெருவளப்பூர் கு-காயத்ரி. கூறினார்.

ஏராளம் கருத்துக்கள் கிடைத்தது பயிற்சிப் பட்டறை முழுக்க முழுக்க பயனுள்ளதாக எனக்கு அமைந்தது என்று கீழவாளாடி செ.அ. அறிவு சுடரொளி மற்றும்  லிபிகா இருவரும் கூறினார்கள்.

சாமி ஆடுதல் பேய் ஆடுதல்  உண்மை என்று நம்பி இருந்தேன் ஆனால் இப்போது இங்கு வந்த தினால்தான் உண்மை  புரிகிறது அது பொய், பித்தலாட்டம் (கைத்தட்டல்) துணிச்சலாக இருப்போம் என்று கீழவாளாடி-சிறீநிதி கூறினார்.

நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைச் செயலாளர் அ.செல்வி, மாவட்டத் தலைவர் வீ.அன்புராஜா நன்றி கூறும் வகையில் இது போன்ற நிகழ்வு நடத்துவதற்கு வாய்ப்ப அளித்த  தலைமை கழகத்திற்கும்.  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ஆகியோருக்கும்.

உடனுக்குடன் பேசி  ஊக்கப் படுத்தி  நிகழ்வு வெற்றியடைவதற்கு முழுக் காரணமாக இருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக் குமாருக்கும், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பயிற்சி வகுப்பு எடுத்த அனைத்து பயிற்சி ஆசிரியர்களுக்கும் பயிற்சி பட்டறைக்கு உதவிகரமாக பொருள் உதவியும் உணவு மற்றும் தேநீர் குறிப்பேடு எழுதுகோல். வழங்கியவர்களுக்கும்   உடல் உழைப்பை அர்ப்பணித்த அனைத்து தோழர்களுக்கும். பயிற்சி மாணவர்களுக்கும் பங்குபெற்ற கழகத் தோழர்களுக்கும். ஒலிபெருக்கி உரிமையாளருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி என்று நன்றி கூறினார்.

இறுதியாக 05.50  மணிக்கு மாணவர்களுடன் இணைந்து அனைவருமே குழு படம் எடுத்து ஒருவருக்கொருவர் கை கொடுத்து நன்றி சொல்லி கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *