நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்!

சென்னை, மே 24- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் 22.5.2026 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஏழை மக்களின் வாழ் விடங்களின் மேம்பாட்டுக் காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறு குடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஜோசப் விஜய் 22.5.2026 அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *