மதுரை, மே 23- தமிழ் நாட்டின் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
உதவி தணிக்கை அலு வலர், கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மாநில மொழி தகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பணிகளில் மாநில மொழி அறிவை அடிப்படை தகுதியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய
49 இந்தியர்கள் பலி
ஒன்றிய அரசு தகவல்
ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மே 23- உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய மொத்தம் 217 இந்தியர்களில் 49 பேர் பலியானதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில் 139 பேர் ராணுவ ஒப்பந்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள நிலையில், 6 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
