‘நீட்’ வினாத்தாள் கசிவு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பதா? என்.டி.ஏ. இயக்குநருக்கு டி.ராஜா கடும் கண்டனம்!

2 Min Read

புதுடில்லி, மே 23 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங்கின் கருத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘நீட்’ வினாத்தாள் கசிவு

முன்னதாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது என்டிஏ இயக்குநர் அபிஷேக் சிங்:

“வினாத்தாள் முழுவதும் கசியவில்லை. குறிப்பிட்ட சில கேள்விகள் மட்டுமே பரப்பப்பட்டன. மேலும், இது என்டிஏ அமைப்பு மூலம் நடைபெறவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

என்டிஏ இயக்குநரின் இந்த விளக்கத்திற்குப் பதிலடி கொடுத் துள்ள டி. ராஜா, பொறுப்பில் இருப்பவர்கள் இவ்வாறு பேசுவது இளைஞர்களின் வாழ்க்கையை விளையாட்டாக்குவது போன்றது என்று சாடியுள்ளார்.

திசை திருப்ப முயற்சிப்பதா?

இதுகுறித்து டி.ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

பொறுப்புத் துறப்பு எங்கே?: “அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படிப் பேசுவது மிகவும் வெட்கக் கேடானது. சில கேள்விகள் மட்டும் எப்படி கசிந்தன? இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது. உண்மையை மறைத்து, இந்த முழுப் பிரச்சினையையும் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். சில கேள்விகள் மட்டுமே கசிந்தன, வினாத்தாள் முழுவதும் கசியவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மக்களுக்கு இதெல்லாம் புரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? நாம் முதலில் மாணவர்களின் உணர்வு களையும் அவர்களின் மன உளைச் சலையும் புரிந்து கொள்ள வேண்டும்.”

“இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகள் தேர்வுக்காகப் படித்துக் காத்திருக்கும் இளைஞர்களை மேலும் கொந்தளிப்படையச் செய்யும். அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இருப்பவர்களிடமிருந்து வரும் இதுபோன்ற திமிரான கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,” இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ராஜா கூறியுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழு வதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்ெகனவே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டி. ராஜாவின் இந்த அறிக்கை அரசியல் அரங்கில் விவா தத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *