‘நீட்’ வினாத்தாள் கசிவு; தர்மேந்திரபிரதான் பதவி விலகும் வரை போராட்டம் : ராகுல் அறிவிப்பு

புதுடில்லி, மே 22 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திரபிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் வெளியானதை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் என்.எஸ்.யு.அய். தொண்டர்களைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இந்த காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதானை நீக்கக் கோரிக்கை விடுத்தார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்ப தாவது: பிரதமர் மோடி, இத் தாலியில் மிட்டாய்களை விநியோகித்துக்கொண்டு ‘ரீல்ஸ்’ காட்சிப்பதிவுக்களை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவில், நீட் வினாத்தாள் கசிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நீதி கேட்டு வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருந்தனர். ஏனெனில், நீட் வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழித்துவிட்டது. பல மாணவர்கள் தங்கள் உயிரையேகூட இழந்துள்ளனர். ஆனால் மோடி இதற்கான பொறுப்பை ஏற்கவுமில்லை; தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கவுமில்லை. இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவுமில்லை.

பதவி விலகும் வரை போராட்டம்

இப்போது, மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நீதி கேட்டுத் தங்கள் குரலை உயர்த்தும்போது பாஜக ஆளும் மாநில அரசுகள் அவர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றன. மாணவர்களின் கேள்விகளுக்குத் தடியடிகளால் பதிலளிக்கும் ஒரு அரசாங்கம், பொறுப்புடைமையின் அடிப்படையில் இயங்குவதில்லை. அது அச்சத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் நாங்கள் அஞ்சி நடுங்குபவர்கள் அல்ல.

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையிலும், நாட்டில் வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம். தோல்வியடைந்த இந்த அரசாங்கம் யாருடைய எதிர்காலத்தைத் திருடியதோ, அத்தகைய ஒவ்வொரு மாணவருக்காகவும் நடைபெறும் போராட்டமே இது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *