நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை!

1 Min Read

ஜெய்ப்பூர், மே 3- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் ஏராளமான போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மய்யங்களில் நீட் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவியர் இங்கு வந்து தங்கி இருந்து போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் அல்மொரா பகுதியை சேர்ந்த டிக்சண்ட் (வயது 20) என்ற மாணவன் கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தானின் கோட்டாவில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவர் 1.5.2026 அன்று காலை தங்கி இருந்த விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த டிக்சண்ட்டை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டிக்சண்ட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் டிக்சண்ட் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாகவும், இதனால் அவர் விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (3.5.2026) நடைபெற உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *